ராகு மகரம் இராசியில் இருந்தால் கேது கடகம் ராசியில் இருக்கும்.
ராகு - கேதுவிற்க்கு இடையேயான கற்பனை கோடு ராகு - கேது அச்சு என்று அழைக்கப்படும்.
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய கிரகங்கள் இயற்கையாக மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம் என்ற நேர் வரிசையில் நகரக் கூடியவை.
செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய கிரகங்கள் சில காலங்களில், வக்கிரகதியாக துலாம், கன்னி, சிம்மம், கடகம், மிதுனம் என்ற எதிர் வரிசையில் நகரும்.
ராகு - கேது அச்சு வின் சுழற்சி எல்லா காலங்களிலும் வக்கிரகதியாக, விருச்சிகம், துலாம், கன்னி, சிம்மம், கடகம் என்ற எதிர் வரிசையில் நகரும்.
நவ கிரகங்களில் நிழல் கிரகங்களான ராகுவுக்கும், கேதுவுக்கும் இடையில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய கிரகங்கள் இருந்தால் அவை கால சர்ப்ப தோஷம் எனப்படும்.
ராகு - கேது அச்சு வின் ஒரு பகுதியில், ராசி, டிகிரி, பாகை அளவுகளில் மற்ற ஏழு கிரகங்களும் அடங்கியிருக்கும்.
கால சர்ப்ப தோஷத்தை யோகமாகவும் கருதலாம்.
ராகு - கேது அச்சு வின் 2 பகுதிகளில் ஏதோ ஒரு பகுதியில் மற்ற 7 கிரகங்களும் அமையப் பெறலாம்.
அதன் அடிப்படையில் 2 விதமான யோகங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
மேலே உள்ள படத்தில் ராகு - கேது அச்சுவின் சுழற்சி முறையில் ராகு வுக்கும் கேதுவுக்கும் இடையே 7 கிரகங்கள் உள்ளன. இவ்வித அமைப்பு உடைய ஜாதகம்
கால சர்ப்ப யோகம் உடைய ஜாதகமாக கருதப்படுகிறது.
மேலே உள்ள படத்தில் ராகு - கேது அச்சு வின் சுழற்சி முறையில் கேது வுக்கும் ராகுவுக்கும் இடையே 7 கிரகங்கள் உள்ளன. இவ்வித அமைப்பு உடைய ஜாதகம்
கால அமிர்த யோகம் உடைய ஜாதகமாக கருதப்படுகிறது.
இந்த கால சர்ப்ப / அமிர்த யோகமுள்ள ஜாதக அமைப்பில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையின் முற்பகுதியில், சுமார் 36 ஆண்டுகளுக்கு, சில தடைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
பிற்பகுதி வாழ்க்கை சிறப்பான யோக காலமாக அமையும்.
பல செல்வந்தர்கள், தொழில் அதிபர்கள், விளையாட்டு வீரர்கள் இவ்வகையான கால சர்ப்ப / அமிர்த யோகம் உடையவர்களாக இருக்கிறார்கள்.
திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது ஜாதகர் கால சர்ப்ப யோகம் உடையவராக இருந்தால் வாழ்க்கை துணையின் ஜாதகம் கால அமிர்த யோகம் அமையப் பெற்று இருப்பது சிறப்பாக இருக்கும்.
கால அமிர்த யோகம் உடைய ஜாதகருக்கு கால சர்ப்ப யோகம் ஜாதகம் அமையப் பெற்ற வாழ்க்கை துணை சிறப்பாக பொருந்தி வரும்.
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
.gif)



0 comments:
Post a Comment