யரசரனின்றவதற்கிள மதியெட்டாகில் வஞ்சியே
செல்வங்குன்றி வகுத்த மந்தயோகந்தப்பும்
குருவுக்கு எட்டில் சந்திரன் இருப்பின் ஜாதகருக்கு பலவித துன்பங்கள் ஏற்படும்.
குருவுக்கு 6-8-ல் சந்திரன் இருந்தால் சகட யோகமகும்.செல்வம், புகழ், குலப்புகழ், உற்றார், உறவினர்கள், பெற்றோர், அனைவரும் வெறுப்பர். வாழ்நாளில் துன்பத்தை அனுபவிப்பார்கள். லக்கினத்திற்கு 6-8ல் அதிக துன்பம் தரும்.
லக்கினத்திற்கு 7-8-ல் இருந்து. இருந்து.இருவருக்கும் 6-8 ஆக இருந்தால் சகட யோகம் அதிகம் பாதிக்கும்.
இதற்க்கு உதாரணமாக நடிகர் ராமராஜனின் ஜாதகத்தை எடுத்துக்கொள்ளலாம் .
திரைப்படங்களில் ஒரு கால கட்டங்களில் பெரும்புகழ் பெற்றார். பணம் புகழ் செல்வாக்கு அனைத்தும் இவரை தேடி வந்தது . இவரின் சகடயோக ஜாதக அமைப்பு இவரை சரிவில் தள்ளிவிட்டது .
நடிகர் ராமராஜன் ஜாதகம் :
இவருடைய ஜாதகப்படி தனுசு லக்னம் . லக்கினாதிபதி கடகத்தில் உச்சம் அடைந்துள்ளார் . அதேசமயம் குருவிற்கு 6 ம் இடத்தில் சந்திரன் அதாவது லக்கினத்தில் சந்திரன் . இது சகடை யோகமாகிறது
சகட யோக பங்கம்
சகட யோக ஜாதகத்தில் சந்திரன் கடகத்தில் ஆட்சியிலும், ரிஷபத்தில் உச்சத்திலும், குருவின் வீடான தனுசு, மீனத்திலும் இருக்க பெற்ற ஜாதகர்களுக்கு தீமைகள் விலகி “நன்மைகள்” ஏற்படும்,
ஜவஹர்லால் நேரு ஜாதகம் :
“நறுமணம் தனுமீன் கன்னி நண்டுடன் எருது தண்டு, திறமுடன் சசியே நிற்கில் தீர்க்கமாம் சகடபின்னம்”
பொருள்:- சந்திரன் தனுசு.மீனம். கன்னி. கடகம். ரிஷபம்.மிதுனம். ஆகிய ராசிகளில் இருந்து “சகட யோகமாயின்” தீமைகள் குறைந்து நன்மைகள் ஏற்றப்படும் என்பதே பாடலின் பொருள்.சகட யோகம் என்ற ஒரு குறிப்பினை மட்டும் வைத்து இதனை படிக்கும் எவரும் அவரவர் ஜாதகத்தினை எடுத்து ஆய்வு செய்ய வேண்டாம்,
எத்தனையோ குறிப்புகளில் இதுவும் ஒன்று. இதற்கு மதிப்பு அவ்வளவே என்ற கருத்தை நிரூபிக்கவே மேலே இரு உதாரணங்கள் சொல்லப்பட்டுள்ளன.
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com



.gif)


