ஓம் சிவ சக்தி
மேலும் ஜென்ம ராசிக்கும் பன்னிரெண்டாம் இடத்தில் எப்பொழுது சனி பகவான் அடி எடுத்து வைக்கிறாரோ அது முதல் ஏழரை நாட்டு சனி ஆரம்பம் என்று சொல்லுவார்கள்.
ராசிக்கும் பன்னிரெண்டாம் இடத்தில் சனி வாசம் செய்யும் காலம் இரண்டரை ஆண்டுகளாகும். அப்படி இருக்கும் பொழுது தன்னுடைய பார்வையால் ரோகஸ்தானத்தையும் - ஏழாம் பார்வையால் பாக்ய ஸ்தானத்தையும் - சனி பார்வை இடுவதால் ஜாதகருக்கும் வருமானம் தடை பட்டு செலவினங்கள் அதிகப்பட்டு காணுதலும், குடும்பம் ஒரு இடத்தை விட்டு இன்னோர் இடம் மாறுதலும், தன் பேச்சுக்கும் மதிப்பின்மையும் உடலில் அடிக்கடி நோய்கள் ஏற்பட்டு விலகுவதும் சொத்துகள் வீட்டிலுள்ள பொருட்கள் கைவிட்டு போவதுமான பலன்களும் ஏற்படலாம்.
இக்காலத்தை கருத்தில் கொண்டு பக்குவமாக நடந்து வந்தாரானால் ஓரளவு தப்பித்து கொள்ளலாம். அடுத்த ஜென்ம சனியை எடுத்து கொள்வோம். ஜென்மத்திலுள்ள சனியால் இரண்டரை ஆண்டு காலபலன் என்ன வென்று பார்ப்போம்.
ஜென்மத்திலுள்ள சனி தன மூன்றாம் பார்வையால் மூன்றாவது ஸ்தானத்தையும் ஏழாம் பார்வையால் களத்திர ஸ்தானத்தையும் பத்தாம் பார்வையால் ஜீவன ஸ்தானத்தையும் பார்வையிடுவதால் இத்தகையோருக்கும் ஏற்கனவே இருந்து வந்த தைரியம் இழந்து இனம் தெரியாத ஓர் பயம் ஏற்படுவதுடன் மனைவியின் உடல் தளர்ச்சியையும் - இருக்குமிடம் மாறுதலையும் - செய்து வரும் தொழிலில் திருப்தியற்ற போக்கும் - எடுத்த காரியம் தாமதத்தில் முடிவு பெறுவதும் ஆகிய பலன்கள் ஏற்பட கூடும். இத்துடன் ஏழரை நாட்டு சனியின் ஐந்தாண்டு கால பலன்கள் முடிவடைகிறது.
இப்பொழுது ராசிக்கு இரண்டாம் இடம் இருக்கும் சனியை பற்றி பார்ப்போம். இங்கே சனி பகவான் இரண்டரை ஆண்டு காலம் வாசம் செய்வார். இந்த இரண்டரை ஆண்டு காலத்திலும் இவரால் அதிக கெடுதல் பலன்கள் ஜாதகருக்கு ஏற்படாது. அநேகமாக வருமானம் உயரத்தக்க சூழ்நிலை அந்த ஜாதகருக்கு உண்டாகலாம்.
இரண்டில் இருக்கும் சனி பகவான் தன் மூன்றாம் பார்வையால் சுக ஸ்தானத்தையும் - ஏழாம் பார்வையால் எட்டாம் இடத்தையும் பத்தாம் பார்வையால் லாப ஸ்தானத்தையும் - பார்வையிடுவதால் ஜாதகருக்கும் சில சமயம் வாய்வு சம்பந்தமான சிறு நோய் ஏற்பட்டு விலகுதலும், கண் பார்வையில் கோளாறும், இதுவரையில் ஏற்பட்டிருந்த இடைஞ்சல் மாறி நற்பலன்கள் , வருமானம் உயர்வதும் உண்டாகும். ஆக முப்பது சதவீத கெடு பலனும் , எழுபது சதவீத நற்பலனும் ஏற்படும். இதுதான் ஏழரை நாட்டு சனியின் பலன்களாகும்.
இப்படிப்பட்ட ஏழரை நாட்டு சனியின் காலத்தில் ஜாதகத்தின் படி சுப ஆதிபத்தியம் உடைய கிரகத்தின் தசா புக்தி நடை முறையில் இருக்குமானால் சொல்லப்பட்ட கேடு பலன்கள் ஏற்படாது . மகர - கும்ப - ரிஷப துலாம் லக்னகாரர்களுக்கும், இதுவே ராசியாக அமைய பெற்றவர்களுக்கும் ஏழரை நாட்டு சனியால் பாதிப்பு இல்லை .
இந்த ஏழரை சனியின் காலத்தில் ஒரு ஜாதகனின் பிறந்த தேதி, பிறந்த தேதியின் கூட்டு எண் , பிறந்த தேதியின் பிரமிடு ஹீப்ரு எண் , இவற்றிற்கும் ஏற்றாற்போல் அந்த ஜாதகரின் பெயரின் மொத்த கூட்டு எண்கள்- பெயரின் ஹீப்ரு எண்கள் அதிர்ஷ்ட கிரகத்தின் ஆதிக்கத்தில் இருந்து அதிர்ஷ்ட முறையில் அமைந்திருந்தால் ஏழரை சனியின் தாக்கத்திலிருந்து தப்பித்து கொள்ளலாம்.
![]() |
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328


0 comments:
Post a Comment