Saturday, December 10, 2022
Tuesday, November 15, 2022
சகடை யோகம் என்றால் என்ன ? இந்த யோகத்தினால் உண்டாகும் நன்மைகள் என்ன ? தீமைகள் என்ன ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் ஆர். இராவணன் BSC
யரசரனின்றவதற்கிள மதியெட்டாகில் வஞ்சியே
செல்வங்குன்றி வகுத்த மந்தயோகந்தப்பும்
குருவுக்கு எட்டில் சந்திரன் இருப்பின் ஜாதகருக்கு பலவித துன்பங்கள் ஏற்படும்.
குருவுக்கு 6-8-ல் சந்திரன் இருந்தால் சகட யோகமகும்.செல்வம், புகழ், குலப்புகழ், உற்றார், உறவினர்கள், பெற்றோர், அனைவரும் வெறுப்பர். வாழ்நாளில் துன்பத்தை அனுபவிப்பார்கள். லக்கினத்திற்கு 6-8ல் அதிக துன்பம் தரும்.
லக்கினத்திற்கு 7-8-ல் இருந்து. இருந்து.இருவருக்கும் 6-8 ஆக இருந்தால் சகட யோகம் அதிகம் பாதிக்கும்.
இதற்க்கு உதாரணமாக நடிகர் ராமராஜனின் ஜாதகத்தை எடுத்துக்கொள்ளலாம் .
திரைப்படங்களில் ஒரு கால கட்டங்களில் பெரும்புகழ் பெற்றார். பணம் புகழ் செல்வாக்கு அனைத்தும் இவரை தேடி வந்தது . இவரின் சகடயோக ஜாதக அமைப்பு இவரை சரிவில் தள்ளிவிட்டது .
நடிகர் ராமராஜன் ஜாதகம் :
இவருடைய ஜாதகப்படி தனுசு லக்னம் . லக்கினாதிபதி கடகத்தில் உச்சம் அடைந்துள்ளார் . அதேசமயம் குருவிற்கு 6 ம் இடத்தில் சந்திரன் அதாவது லக்கினத்தில் சந்திரன் . இது சகடை யோகமாகிறது
சகட யோக பங்கம்
சகட யோக ஜாதகத்தில் சந்திரன் கடகத்தில் ஆட்சியிலும், ரிஷபத்தில் உச்சத்திலும், குருவின் வீடான தனுசு, மீனத்திலும் இருக்க பெற்ற ஜாதகர்களுக்கு தீமைகள் விலகி “நன்மைகள்” ஏற்படும்,
ஜவஹர்லால் நேரு ஜாதகம் :
“நறுமணம் தனுமீன் கன்னி நண்டுடன் எருது தண்டு, திறமுடன் சசியே நிற்கில் தீர்க்கமாம் சகடபின்னம்”
பொருள்:- சந்திரன் தனுசு.மீனம். கன்னி. கடகம். ரிஷபம்.மிதுனம். ஆகிய ராசிகளில் இருந்து “சகட யோகமாயின்” தீமைகள் குறைந்து நன்மைகள் ஏற்றப்படும் என்பதே பாடலின் பொருள்.சகட யோகம் என்ற ஒரு குறிப்பினை மட்டும் வைத்து இதனை படிக்கும் எவரும் அவரவர் ஜாதகத்தினை எடுத்து ஆய்வு செய்ய வேண்டாம்,
எத்தனையோ குறிப்புகளில் இதுவும் ஒன்று. இதற்கு மதிப்பு அவ்வளவே என்ற கருத்தை நிரூபிக்கவே மேலே இரு உதாரணங்கள் சொல்லப்பட்டுள்ளன.
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Monday, November 14, 2022
ஜாதக பலனை சொல்லும்பொழுது லக்கினம் - ராசி - இவைகளில் எதை முதன்மையாக வைத்து பலன் சொல்லவேண்டும் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC
லக்கினமும், லக்கின அதிபதியும் எவ்வளவு சுப வலுவில் இருக்கிறதோ அந்த அளவு தான் ஜாதகரின் வாழ்க்கையில் எல்லா விஷயங்களும் அவ்வாறே நடைபெறும்.
ராசி என்பது உடல் மற்றும் மனதை குறிக்கும். சந்திரனின் இருப்பை வைத்து உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தையும், மன வலிமையையும் நிச்சயம் கணிக்க முடியும்.
லக்கினத்தின் அடிப்படையில் தான் தசா - புக்தி பலன்கள் காண முடியும். ராசியின் அடிப்படையில் தான் கோட்சார பலன்கள் காண முடியும்.
தசா புக்தியும், கோட்சாரமும் ஒரு ரயில் தண்டவாளத்தின் இரண்டு இரும்பு தூண்கள் ஆகும். எனவே தசா புக்தி இல்லாமல் கோட்சாரமும், கோட்சாரம் இல்லாமல் தசா புக்தியும் முழுமை பெறாது.
இறுதியாக லக்கினம் வலது கண், ராசி இடது கண். இரண்டும் நிச்சயம் நமக்கு தேவை.
ஆனால் பலன்கள் கூற முதலில் தசா புக்தி அமைப்பு தேவை. அதற்கு லக்கினம் தேவை. இரண்டாவதாக இந்த தசா புக்தியில், ஒரு குறிப்பிட்ட கோட்சார கிரக அமைப்பில் தான் ஜாதகருக்கு அந்த குறிப்பிட்ட பலன்கள் நடைபெறும்.
எனவே முதல் ரேங்க் லக்கினம், இரண்டாவது ரேங்க் ராசி. எனவே ஒரு தனி நபர் ஜாதகத்தில் இரண்டும் கவனிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம்.
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Wednesday, November 9, 2022
கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன ? இதன் நன்மை தீமைகளை கூற முடியுமா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC
ராகு மகரம் இராசியில் இருந்தால் கேது கடகம் ராசியில் இருக்கும்.
ராகு - கேதுவிற்க்கு இடையேயான கற்பனை கோடு ராகு - கேது அச்சு என்று அழைக்கப்படும்.
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய கிரகங்கள் இயற்கையாக மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம் என்ற நேர் வரிசையில் நகரக் கூடியவை.
செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய கிரகங்கள் சில காலங்களில், வக்கிரகதியாக துலாம், கன்னி, சிம்மம், கடகம், மிதுனம் என்ற எதிர் வரிசையில் நகரும்.
ராகு - கேது அச்சு வின் சுழற்சி எல்லா காலங்களிலும் வக்கிரகதியாக, விருச்சிகம், துலாம், கன்னி, சிம்மம், கடகம் என்ற எதிர் வரிசையில் நகரும்.
நவ கிரகங்களில் நிழல் கிரகங்களான ராகுவுக்கும், கேதுவுக்கும் இடையில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய கிரகங்கள் இருந்தால் அவை கால சர்ப்ப தோஷம் எனப்படும்.
ராகு - கேது அச்சு வின் ஒரு பகுதியில், ராசி, டிகிரி, பாகை அளவுகளில் மற்ற ஏழு கிரகங்களும் அடங்கியிருக்கும்.
கால சர்ப்ப தோஷத்தை யோகமாகவும் கருதலாம்.
ராகு - கேது அச்சு வின் 2 பகுதிகளில் ஏதோ ஒரு பகுதியில் மற்ற 7 கிரகங்களும் அமையப் பெறலாம்.
அதன் அடிப்படையில் 2 விதமான யோகங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
மேலே உள்ள படத்தில் ராகு - கேது அச்சுவின் சுழற்சி முறையில் ராகு வுக்கும் கேதுவுக்கும் இடையே 7 கிரகங்கள் உள்ளன. இவ்வித அமைப்பு உடைய ஜாதகம்
கால சர்ப்ப யோகம் உடைய ஜாதகமாக கருதப்படுகிறது.
மேலே உள்ள படத்தில் ராகு - கேது அச்சு வின் சுழற்சி முறையில் கேது வுக்கும் ராகுவுக்கும் இடையே 7 கிரகங்கள் உள்ளன. இவ்வித அமைப்பு உடைய ஜாதகம்
கால அமிர்த யோகம் உடைய ஜாதகமாக கருதப்படுகிறது.
இந்த கால சர்ப்ப / அமிர்த யோகமுள்ள ஜாதக அமைப்பில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையின் முற்பகுதியில், சுமார் 36 ஆண்டுகளுக்கு, சில தடைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
பிற்பகுதி வாழ்க்கை சிறப்பான யோக காலமாக அமையும்.
பல செல்வந்தர்கள், தொழில் அதிபர்கள், விளையாட்டு வீரர்கள் இவ்வகையான கால சர்ப்ப / அமிர்த யோகம் உடையவர்களாக இருக்கிறார்கள்.
திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது ஜாதகர் கால சர்ப்ப யோகம் உடையவராக இருந்தால் வாழ்க்கை துணையின் ஜாதகம் கால அமிர்த யோகம் அமையப் பெற்று இருப்பது சிறப்பாக இருக்கும்.
கால அமிர்த யோகம் உடைய ஜாதகருக்கு கால சர்ப்ப யோகம் ஜாதகம் அமையப் பெற்ற வாழ்க்கை துணை சிறப்பாக பொருந்தி வரும்.
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Wednesday, October 26, 2022
மலர்க்கொடி (MALARKODI) இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? இந்த பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC
மலர்க்கொடி - MALARKODI - ராகுவின் ஆதிக்கமும் சனியின் ஆதிக்கமும் இந்த பெயரில் கலந்திருக்கிறது . குருவின் குணத்தை வெளிப்படுத்தும் இந்த பெயர் கன்னி ராசிக்குரிய பெயராகும் .
அதிர்ஷ்ட பூஜை மலர் - முல்லை
அதிர்ஷ்ட நட்சத்திரம் - புனர்பூசம் விசாகம் பூரட்டாதி
நவகிரக மேடைக்கு சென்று வியாழக்கிழமை அன்று முல்லை மலர் கொண்டு குருபகவானை வழிபடுவதோ அல்லது குரு தட்சணாமூர்த்தி கடவுளை வழிபாடு செய்து வந்தால் இந்த பெயருக்குள்ள தோஷங்கள் விலகும் .
பரிகாரம் : 3
தினமும் படுக்கைக்கு செல்லும் முன் கொஞ்சம் பச்சை கடலையை எடுத்து தலையணையின் கீழ் வைத்து படுத்து உறங்கவேண்டும் . மறுநாள் காலையில் எழுந்ததும் அந்த பச்சை கடலையை எடுத்து பத்திரமாக சேமித்து வைத்துக்கொள்ளவேண்டும் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .



.gif)



